1 . ஆற்றுப்படலம் - மாதவிக்காப்பியம்
கருவறைக்குள் கருவாக தோன்றி மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐந்து புலன்களின் உருவமாகி அருவவுமாகி எல்லை கடந்து சிறந்து விளங்கும் படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று வினைகள் புரிந்து எல்லாம் கடந்து ஒருவனாகி இருக்கும் கடவுளின் பெருஞ்செயல் பற்றிக் கூறுவோம். 1111 005 6. மன்னகம் ஆளும் வாழும் வளரலைக் கடலின் ஓரம் தன்னொளி முத்தும் சங்கும் கண்டிவை அவையே என்று வெண்ணெழில் மேகம் மெல்லக் குறுகவாங் காடிக் கோடித் தன்னலைக் கரங்கள் காட்டித் தண்கடல் அழைத்த தாமால் 7. அலையெழில் கரங்கள் கோடி அணைத்தன மேக மங்கை அழகெழில் கருவால் மேனி செழித்தனள் எழுந்து ஆங்கு நிலைபெறா தசைந்து தென்றல் நடையினும் மெல்லச் சென்று உலகிருள் விலக்கும் செய்யோன் ஒளியையும் மறைத்தா ளாமால். 8. கடலினை முத்த மிட்டுக் கருவுற்ற காள மேக மடவிள மங்கை வான வெளியிடை உலவி வண்ண மடவிள மயிலின் கூட்டம் மகிழ்வுடன் எழுந்து நோக்க நெடிதுயர்ந் தோங்கும் குன்ற மிசையெழிற் காட்சி தந்தாள் 9. மண்ணகம் செழித்தா லன்றி வானகத் தேவர்க் கென்றும் எண்ணிய பூசை கிட்டா தெனமழை பொழியும் மேகம் மண்ணகத் துயிர்கள் யாவும் மனங்களித் தெழும...